ADVERTISEMENT

மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு; வலுக்கும் கண்டனங்கள்

07:44 PM Nov 19, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

இதனிடையே, இப்படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “சமீபத்தில் மன்சூர் அலிகான் என்னை பற்றி கேவலமாக பேசிய ஒரு வீடியோ எனது கவனத்திற்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும், இது பாலியல் அவமரியாதை, பெண் வெறுப்பு மற்றும் அவரது மோசமான மனநிலையை நான் காண்கிறேன். அவருடன் அந்த படத்தில் சேர்ந்து நடிக்காததற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இனிமேலும், இது போன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். இவர் போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் குரல்கள் எழுந்து வருகிறது. நடிகை குஷ்பு, லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியிருப்பதாவது, “நடிகைகளை பற்றி அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக மன்சூர் அலிகான் பொறுப்புணர்ந்து பேச கற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை அவரை ஏன் நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கக்கூடாது?” என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT