ADVERTISEMENT

மன்சூர் அலிகானிடம் விசாரணை நிறைவு 

05:35 PM Nov 23, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் எனத் தொடர்ச்சியாக திரைத்துறை சம்பந்தமான சங்கங்களிடமிருந்து மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் எழுந்து வந்தது. பின்பு மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் கொடுத்தனர். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று ஆஜராகவில்லை எனக் குறிப்பிட்டு நாளை ஆஜராக அனுமதி வழங்க காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தநிலையில் திடீரென்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார் மன்சூர் அலிகான். மேலும் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் பேசுகையில் ‘போலீசார் விசாரிச்சாங்க. நான் நடந்ததை சொன்னேன். நான் தனிப்பட்ட த்ரிஷா கிருஷ்ணனை விமர்சிக்கல. அவங்கள நடிகையா ரொம்ப ரெஸ்பெக்ட் பண்றேன்' என பேச தொடங்கினார். அதற்குள் காவல்துறை அதிகாரிகள் 'சார் உங்களுக்கான வண்டி வந்துவிட்டது. நீங்கள் கிளம்புங்கள்' என அறிவுறுத்திய நிலையில் அங்கிருந்து நடிகர் மன்சூர் அலிகான் கிளம்பினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT