ADVERTISEMENT

7 தமிழர் விடுதலையில் சட்டத்தை மீறி செயல்படுகிறார் ஆளுநர்- பெ.மணியரசன்...

08:27 AM May 12, 2019 | bagathsingh

மே 14 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கல்லாகோட்டையில் இயங்கிவரும் மதுபான ஆலையை இழுத்து மூடக்கோரி மகளிர் நடத்தும் முற்றுகைப் போராட்டம் குறித்து தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அப்போது அவர் பேசியதாவது.. பூரண மதுவிலக்கு கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை உள்ள தனியார் மதுபான ஆலை பகுதியில் எங்கள் பேரியக்கத்தின் மகளிர் ஆயத்தின் சார்பில் வரும் 14 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

மேலும் கல்லாகோட்டையில் தினந்தோறும் மதுபான ஆலையின் தேவைக்காக பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் அற்றுப் போனது. முற்றிலுமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து போராடிய கிராம விவசாயிகள் 150 பேர்கள் மீது போடப்பட்ட வழக்கிற்காக விவசாயிகள் நீதிமன்றம் அலைகிறார்கள்.

அதனால் உடனடியாக இந்த மதுபான ஆலையை மூட வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மதுபான ஆலையை மூட வலியுறுத்தி ஒவ்வொரு மதுபான ஆலை முன்பும் மகளிர் ஆயத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. அதாவது கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஒரு மொழி கொள்கையை அறிமுகப்படுத்தப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதை தமிழக அரசு மறுத்து இருந்தாலும் விஷயம் கசிய தொடங்கியுள்ளது. ஒரு மொழி பாடத்திட்டம் செயல்படுத்துவது தமிழ் மக்களின் முதுகில் குத்துவதோடு தமிழ் மொழியை அழிப்பதற்கு சமம், இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு போராட வேண்டும். வடக்கில் இருநது தமிழை அழிக்க துடிப்பவர்களின் செயலுக்கு தமிழக அரசு தலையசைக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுவிக்காமல் பழிவாங்கும் நோக்கத்தோடு ஆளுநர் செயல்பட்டு வருகிறார், இந்த விவகாரத்தில் காங்கிரசும் பாஜகவும் ஒரே நோக்கில் செயல்படுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி ஆளுநர் செயல்பட்டு வருகின்றார். நேற்றைய தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் 7 தமிழர் விடுதலை அறிக்கையில் கையொப்பமிட வேண்டும்.

திமுக 7 பேர் விடுதலை குறித்து கவலைப்படவில்லை. தமிழர்களின் உரிமைகள் திமுக முதன்மையாக கருதவில்லை. ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே செயல்படுகின்றனர்.

காவிரியையும் கோதாவரியும் இணைப்போம் என்று முதல்வர் வாக்குறுதி கொடுத்து வருவது ஏமாற்று வேலை. இதை ஆந்திரா ஒருபோதும் அனுமதிக்காது. இந்தத் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த முடியாது.

வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் தமிழகத்தில் செயல்படுத்த முடியாது. தமிழர்களின் பிணத்தில் தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களுக்கு தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை அளித்துள்ளது வேதனை அளிக்கிறது. நாங்கள் இந்த திட்டம் நிறைவேற விடாமல் தடுப்பதற்காக போராடுவோம், என பேசினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT