ADVERTISEMENT

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்! -மஜக கூட்டத்தில் தீர்மானம்!

02:33 PM Sep 14, 2020 | rajavel

ADVERTISEMENT

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தோப்பு துறை, தேத்தாக்குடி தெற்கு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் புதிதாக தங்களை இணைத்து கொண்டனர். நகர செயலாளராக கருப்பு என்கின்ற முகம்மது ஷரிப் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டனர். இக்கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் தலைமை வகித்தார்.

ADVERTISEMENT

இதற்கு பின்னர் பொறுப்பேற்று கொண்ட அனைவரும் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இக்கூட்டத்தில் நீட் தேர்வை நாடு முழுக்க ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவ-மாணவிகளிடம் தற்கொலை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, மக்கள் எதிர்க்கும் இந்த நீட் தேர்வை நாடு முழுக்க ரத்து செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2. வேதாரண்யம் பகுதியில் மருத்துவ சேவையாற்றுவதர்க்காக கட்சியின் சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

3.வேதாரண்யம் பகுதியில் இந்து அறநிலையதுறைக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட குளங்கள் காணாமல் போயுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். அவற்றை ஆராய்ந்து கண்டறியுமாறு தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. பூப்பெட்டி அருகே தமிழக மின்சார வாரியம் சார்பில் 110 KV மின்கம்பம் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. அங்குள்ள வழிப்பாட்டு தலமும், கால்வாயும் பாதிக்கப்படாமல் மற்று வழியில் அதை அமைத்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT