ADVERTISEMENT

“என் மரணத்திற்கு முழு காரணம்.....” வாட்ஸாப் ஸ்டேடஸ் வைத்துவிட்டு ரயில் முன் விழுந்த இளைஞர்

02:45 PM Oct 06, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சியை அடுத்த மணப்பாறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்த மாணவர் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த நிலையில் பெற்றோர் திட்டியதால் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

மணப்பாறையில் தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி விளையாடி வந்துள்ளார். பணம் செலுத்தி விளையாட கையில் பணம் இல்லாததால் வீட்டில் இருந்த நகை பணம் ஆகியவற்றை எடுத்து செலவு செய்துள்ளார். இதனை கண்டு பிடித்த பெற்றோர் தங்கள் மகனை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த மாணவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி ரயில்வே காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் இறந்தவர் யார் என தெரியாததால் அங்கிருந்த இளைஞர்கள் உடலைப் புகைப்படம் எடுத்து பகிர்ந்தனர். இதன் பின் இறந்தவர் உடல் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

விசாரித்ததில் மாணவர் தன்னுடைய செல்போனில், “என்னுடைய மரணத்திற்கு முழுக்காரணம் ஆன்லைன் ரம்மி தான். அதில் நான் அடிமையாகி அதிகப் பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என வாட்ஸாப்பில் ஸ்டேடஸ் வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மாணவரின் பெற்றோர் கூறுகையில் ஆன்லைன் விளையாட்டுகளால் ஆங்காங்கு உயிரிழப்புகள் ஏற்படுவதை அறிந்திருக்கிறோம். ஆனால் மகனையே இழப்போம் என எதிர்பார்க்கவில்லை எனக் கூறி கதறி அழுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT