ADVERTISEMENT

"எங்கள் மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல" - கமல்ஹாசன் ட்வீட்!

11:17 PM Mar 13, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சியின் தலைவர்கள் தீவிர சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1- ஆம் தேதி அன்று நாடு முழுவதும் நடைபெறும் என்றும், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency- NTA) நேற்று (12/03/2021) வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "நர்சிங், லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்று ஆணி அறைகிறது, மத்திய அரசு. அதற்கும் தலையாட்டும் மாநில அரசு. எல்லாவற்றையும் விற்பவர்கள், தொடர்ந்து கல்வியையும் கடை விரிக்கிறீர்களே… அரசுகளே, எங்கள் மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT