Published on 11/09/2021 | Edited on 11/09/2021

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாரதியாரின் கருத்துகள் குறித்து நினைவுகூர்ந்துவருகின்றனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் நிலத்திற்கென பெரும் கனவுகளைத் தந்துவிட்டுச் சென்ற பாரதி, தமிழறிந்த ஒவ்வொருவரிலும் வாழ்கிறார். அவரவர் துறையின் பாரதியாக முயல்வதே பெரும் கவிஞனின் நினைவைப் போற்ற ஆகச்சிறந்த வழி" என்று புகழாரம் சூட்டினார்.