ADVERTISEMENT

அண்ணாமலையார் கோவிலில் ஏற்றப்பட்டது 'மகாதீபம்'

06:28 PM Nov 29, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா. இன்று சிகர நிகழ்ச்சியான மகாதீபம் நிறைவடைகிற நிலையில், தற்பொழுது 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 3,500 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த வருடம், நேற்று முதல் திங்கட்கிழமை வரை வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வர தடைவிதிக்கப்பட்டிருந்தது. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்பொழுதுமே லட்சக்கணக்கான பக்தர்கள் திரள ஏற்றப்படும் தீபம் இந்த ஆண்டு முதல்முறையாக உள்ளூர் பக்தர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில் ஏற்றப்பட்டதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மட்டுமல்லாது, கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT