ADVERTISEMENT

மாயமான பெண்! தீவிரமாக தேடும் காவல்துறை! 

03:00 PM Feb 10, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், செங்குதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(45). இவருடைய மகள் கவி (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அவரது சகோதரி இருவரும், திருப்பூர் வெள்ளைகோவிலில் உள்ள பனியன் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1ஆம் தேதி வேலைக்கு சேர்ந்த நிலையில், கவிக்கு வேலை பிடிக்காததால், திருச்சி மாவட்ட லால்குடி அருகே கல்லக்குடியில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்கிருந்து புறப்பட்டு அரியலூரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். அதேசமயம், அவர் வீட்டிற்கும் செல்லவில்லை.

இந்நிலையில், அவரது தந்தை, தனது உறவினர் வீட்டிற்கு ஃபோன் செய்து மகள் இன்னும் வரவில்லை என்ன காரணம் என்ன என்று கேட்டுள்ளனர். அவரது உறவினர், கவி ஏற்கனவே கிளம்பிவிட்டார். என்ன ஆனது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால், பதட்டமடைந்த அவர், இதுகுறித்து கல்லக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT