ADVERTISEMENT

மதுரை, தேனியைத் தொடர்ந்து மற்றொரு தொகுதியைக் கேட்கும் திமுக நிர்வாகிகள்!

07:30 PM Jan 31, 2024 | kalaimohan

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைமை ஆலோசனை செய்து வருகிறது. சென்னையில் அதற்கான திமுக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மதுரை எம்பி தொகுதி திமுகவிற்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதேபோல் தேனி தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று காலை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது. திமுக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த முறை இராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறையாவது திமுக வேட்பாளர்களுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நிர்வாகிகளுடைய கோரிக்கை பரிசீலிக்கப்படும். ஆனால் தலைமை எடுக்கும் முடிவை கருத்து வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டும் என திமுக தலைமை ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT