ADVERTISEMENT

சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

05:42 PM Oct 13, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கக்கோரி மதுரையைச் சேர்ந்த மதுரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (13/10/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "10- ஆம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? மனுதாரர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். மனுதாரருக்கு அரசு அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. 90- க்கும் மேற்பட்ட பதகங்களைப் பெற்ற மாற்றுத்திறனாளிக்கு 10- வது படித்ததால் உதவியாளர் பணி கொடுத்ததை ஏற்க முடியாது. தமிழகத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது? தமிழகத்தில் அரசியல் ஸ்டார், சினிமா ஸ்டார், கிரிக்கெட் ஸ்டார் என மூன்று ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு இருக்கிறது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கொண்டாடப்படுவது இல்லை. பிற மாநிலங்களில் விளையாட்டு வீரருக்கான உதவிகளை அம்மாநில அரசுகள் சிறப்பாக செய்கின்றன என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT