ADVERTISEMENT

புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

01:04 PM Oct 29, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு, தனியார் கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (29/10/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவ்வளவு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தந்தது அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலா? மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு அனுமதி வழங்கியவர்கள்தான் காரணம். இது போன்ற பிரச்சனைகளை களைய தேவைக்கேற்ப கல்லூரிகளைத் தொடங்க வேண்டும்.

தற்போது தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை; பொறியியல் பட்டதாரிகளைத் தான் உருவாக்குகின்றனர் எனக் கருத்துக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்தையும் எதிர்மனுதாராகச் சேர்த்துப் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT