ADVERTISEMENT

மதுரையில் கரோனா பரிசோதனை ஆய்வகம்! அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்!

12:22 PM Mar 25, 2020 | santhoshb@nakk…

மதுரை மாவட்டத்தில் அமைகிறது கரோனா பரிசோதனை ஆய்வகம்.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

ADVERTISEMENT

குறிப்பாக தமிழகத்தில் 18 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் 8- வது கரோனா பரிசோதனை ஆய்வகத்தை மதுரையில் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைகிறது. ஆய்வகம் அமைவதால் மதுரையை சுற்றியுள்ள மக்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய உதவும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT