ADVERTISEMENT

 "உயிரே போனாலும் பரவாயில்லை; நானே சென்று பல்லக்கை சுமப்பேன்" - மதுரை ஆதீனம் பேட்டி 

12:45 PM May 03, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடைவிதித்தது வருத்தம் அளிக்கிறது என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், "சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறது. தருமபுர ஆதீனம் பல்லக்கை தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தரும ஆதீன பல்லக்கை சுமப்பேன். என் குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்.

500 ஆண்டுகளாக வராத சட்ட ஒழுங்கு பிரச்சனை இப்போது ஏன் வருகிறது. காலங்காலமாக நடக்கும் பாரம்பரியத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது.இந்த நிகழ்ச்சியை முதல்வர் நேரில் வந்து பார்க்க வேண்டும். பட்டினப் பிரவேசத்தை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் செல்வேன். அரசியல் வேறு ஆன்மிகம் வேறு" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT