madurai aathinam

ஜெயேந்திரர் மறைவு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன் என மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,

ஜெயேந்திரர் மறைவு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். 1975ம் ஆண்டு முதல் இன்று வரை ஆதினத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் ஜெயேந்திரர். கன்னியகுமரி மாவட்டத்தில் மதப் பிரச்சனை எழுந்தபோது சமாதானம் செய்தவர் ஜெயேந்திரர்.

Advertisment

மதுரை ஆதினம் உங்களுடைய பணி திருஞானசம்மந்தர் போன்ற பணியாக இருக்கிறது. என்றென்றும் உங்களுடைய பணி இந்த சமூதாயத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்று கூறுவார். அவரை இழந்து வாடும் சங்கரமடத்தின் பக்தர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெயேந்திரர் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என இறைவனை பிராத்திக்கிறேன். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடர்ந்து ஜெயந்திரர் விட்டு சென்ற பணியை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisment