ADVERTISEMENT

குறைந்த மழைப் பொழிவு; சரியும் பவானிசாகர் நீர்மட்டம்

10:40 PM Feb 13, 2024 | vijayakumar@na…

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விடப் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

ADVERTISEMENT

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 74.43 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 267 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கன அடியாக நீர் அதிகரித்துத் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 3,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.68 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.49 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்துள்ளது. மழைப் பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT