ADVERTISEMENT

மண்டையை பிய்த்துக்கொள்ள வைக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள்! -தகிக்கும் தங்கம் தென்னரசு!

02:45 PM Sep 26, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘பாடம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களைப் போக்கவே பள்ளிகள் திறக்கப்படுகின்றன..’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ‘இந்த அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது’ என, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு பிடிபிடித்துள்ளார்.

திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசுவின் ஆதங்கம் இதோ -

‘என்னதான் சார் பண்ணப் போறீங்க?‘ அக்டோபர் 1 ம் தேதி 10, 11, & 12 ம் வகுப்புகளுக்குப் பள்ளி திறக்கப்படும்ன்னு சொல்றீங்க. ஆனால், கூடவே ஆன் லைன்ல பாடம் நடத்துவோம்ன்றீங்க.

“பாடங்களைச் சொல்லித்தருவதற்கு இல்லை; சந்தேகங்களைப் போக்குறதுக்காகத்தான் பள்ளிக்கூடத்தைத் திறக்கறோம்ன்னு” சொல்றீங்க. அப்படியான்னு கேக்குறதுக்குள்ள, மாணவர்கள் வீட்டிலிருந்தே சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைத் தரப்போறோம்ன்னு ஒரு ‘குண்டைப்’ போடறீங்க.

அப்படியே சந்தேகம் கேட்க பள்ளிக்கூடத்துக்கு வர்ரதுன்னா அப்பா, அம்மாகிட்ட எழுத்துப் பூர்வமா எழுதி வாங்கிட்டு வந்து சந்தேகம் கேளுங்கன்னு ஜி.ஓ. போட்டுட்டு நாளைக்கு ஒண்னுன்னா பழிய அவங்க தலைல கட்டப் பார்க்கறீங்க.

பாடத்திட்டத்துல எவ்வளவு பாடம் இந்த ஆண்டு குறைக்க போறீங்க? மொத்தத்துல இத்தனை சதவீதம்ன்னு குறைக்கப் போறீங்களா? அல்லது, ஒவ்வொரு பாடங்களிலும் குறைப்பு இருக்குமா? இதை எல்லாம் தெளிவா சொல்லாம மொட்டையா குழு அறிக்கை மேல முதலமைச்சர் முடிவு எடுப்பார்ன்னு எத்தனை நாள் சொல்லீட்டே இருப்பீங்க?

இதுல எதுவுமே உறுதியா தெரியாம எந்தப் பாடத்தைப் பள்ளிக்கூடத்துல நடத்துறது? பாடத்தை நடத்தாம பிள்ளைங்க அதுல என்ன சந்தேகத்தைக் கேக்குறது. ஈரோட்டில் ஒரு அறிவிப்பு ; அடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு அறிவிப்பு; இப்போது மீண்டும் ஈரோட்டில் ஒரு மறுஅறிவிப்பு.

‘இடக்கருக்கு வழி எங்கேன்னா கிடக்கிறவங்க தலை மேலே’ அப்டின்னு சொல்ற மாதிரி எல்லார் மண்டையையும் பிய்த்துக்கொள்ள வைத்து இந்தக்குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா, சாரே?” என்று கேட்டுள்ளார். தங்கம் தென்னரசுவின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிப்பாரா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT