ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள்!!

07:36 AM Sep 25, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, இந்த ஒன்பது மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி முடிந்தது.

கிராம ஊராட்சி வார்டு பதவிகளுக்கு 72,071 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 15,967 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். அதைப்போல, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 8,671 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,122 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக அனைத்து பதவிகளையும் சேர்த்து 97,831 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று (25.09.2021) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT