Published on 04/01/2020 | Edited on 04/01/2020
தமிழகத்தில் மறுவரையறை செய்யப்படாத மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு, அதற்கான வாக்கு எண்ணிக்கையும் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் 5067 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 2338 இடங்களிலும், அதிமுக 2185 இடங்களிலும் வென்றுள்ளது. இதே போல் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 272, அதிமுக 241 இடங்களில் வெற்றி பெற்றன. மொத்ததில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்த்து இனி நகர்ப்புற தேர்தலை நடத்தமாட்டார்கள் என நம்புகிறேன். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர் என தெரிவித்தார்.