ADVERTISEMENT

உள்ளாட்சி தேர்தல்: வரலாற்று வெற்றியை பதிவுசெய்த திமுக கூட்டணி!

07:26 AM Oct 13, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக கடந்த வாரம் நடைபெற்றது. ஒரு லட்சம் பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (12.10.2021) காலை முதல் எண்ணப்பட்டுவருகிறது. இதுவரை 85 சதவீத வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளது. இதில் திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

140 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக 133 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 891 இடங்களிலும் அதிமுக 177 இடங்களிலும் முன்னணியில் இருந்துவருகிறது. பாமக 33 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும், தேமதிக ஒரு இடத்திலும் முன்னணியில் இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய தலைவர் பதவிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேட்சையாக 150க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். இதில் 77 பேர் வெற்றிபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, அடுத்து நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT