ADVERTISEMENT

உள்ளாட்சியில் தேர்தல் எதிரொலி - வண்டலூர் பூங்கா மூடல்!

05:06 PM Oct 06, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக குறிப்பிட்ட அந்த மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், முன்னெச்சரிக்கையாக மக்கள் அதிகம் வரும் இடங்களைத் தேர்தல் ஆணையம் மூட உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவை அதிகரிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரும் 9ம் தேதி மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT