வண்டலூர் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக பூங்காநிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் சிங்காரா வனச்சரகத்தில், கடந்த மாதம் 20-ஆம் தேதி, ஓடைப் பகுதியில் பெண் புலி ஒன்று உயிரிழந்து கிடந்தது. உயிரிழந்து கிடந்த பெண் புலிக்கு அருகில் இரண்டு ஆண் புலிக்குட்டிகள் உயிருடன் இருந்தன.அவற்றை மீட்டவனத்துறையினர், பிறந்து சுமார் இருபது நாட்களேஆன, அந்தப் புலிக்குட்டிகளைவண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுவந்தனர். தற்போது, அந்த இரண்டு புலிக்குட்டிகளும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாக, பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.