ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னணி நிலவரம் (01.10AM)

01:11 AM Jan 03, 2020 | santhoshb@nakk…

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27- ஆம் தேதி மற்றும் 30- ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

ADVERTISEMENT

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில், இரவு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று (03.02.2020) அதிகாலை (01.10AM) நிலவரப்படி முன்னிலை விவரங்கள்.

ADVERTISEMENT


மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (398/515)

அதிமுக கூட்டணி: 200 முன்னிலை
திமுக கூட்டணி: 197 முன்னிலை
அமமுக: 1 முன்னிலை


ஒன்றிய கவுன்சிலர் பதவி (3,135/5067)

அதிமுக கூட்டணி; 1,345 முன்னிலை
திமுக கூட்டணி: 1,498 முன்னிலை
அமமுக: 50 முன்னிலை
நாம் தமிழர்- 1 முன்னிலை
பிற கட்சிகள்- 241 முன்னிலை


உள்ளாட்சித் தேர்தல்- வெற்றி பெற்றவர்கள் விவரம்!

நாமக்கல்: கபிலர்மலை ஒன்றியம் 10- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக அதிமுகவின் இன்பதமிழரசி வெற்றி.

விருதுநகர்: வத்திராயிருப்பு ஒன்றியம் 11- வது வார்டில் திமுக வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி.

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் ஒன்றியம் 18- வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் மொட்டைசாமி வெற்றி.

தேனி: பெரியகுளம் ஒன்றியத்தில் 3- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் ஈஸ்வரி வெற்றி.

திருவள்ளூர்: 23- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் ரவி வெற்றி.

திருவள்ளூர்: சோழவரம் ஒன்றியம் 10- வது வார்டில் திமுக வேட்பாளர் சுபவேணி வெற்றி.

கோவை: காரமடை ஒன்றியம் 11- வது வார்டில் நாகராஜ் (தேமுதிக), 13- வது வார்டில் கலைச்செல்வி (பாஜக) வெற்றி.

திருப்பூர்: அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக சுதா வெற்றி.

மதுரை மேற்கு ஒன்றியம் 13- வது வார்டில் திமுக வேட்பாளர் வீரராகவன் வெற்றி.

விருதுநகர் ஒன்றியம் 13- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் போஸ், 14- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் சிவக்குமார், 10- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் புவனா வெற்றி.

தேனி: ஆண்டிப்பட்டி 6- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் மகாராஜன் வெற்றி.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT