ADVERTISEMENT

வெளியானது பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல்... சசிகலா புஷ்பா, கராத்தே தியாகராஜனுக்கு முக்கிய பொறுப்பு! 

06:06 PM May 06, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியலின் படி, மாநில துணைத் தலைவராக இருந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறையில் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக துணைத்தலைவராக நாராயணன் திருப்பதி, ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக மாநில செயலாளராகக் கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில மகளிர் அணி தலைவராக உமாபாரதி, இளைஞர் அணித்தலைவராக ரமேஷ் சிவா நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில பிரிவு தலைவராக எம்.சி முனுசாமி, கலைகலாச்சார பிரிவு தலைவராக பெப்சி ஜி.சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடக பிரிவு தலைவராக சி.டி.ஆர் நிர்மல்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஊடக பிரிவு தலைவராக ரங்கநாயகலு நியமிக்கப்பட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT