ADVERTISEMENT

அரசுக் கல்லூரியில் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தைகள்; வைரலாகும் வீடியோ 

04:46 PM Jan 19, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதிக்கு அருகே உள்ளது கூட்டுறவு காலனி. சமீபகாலமாக, வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வன விலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற வன விலங்குகள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள்ளும் குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வரத் துவங்கி விட்டன.

இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்கள், காலையிலும் மாலையிலும் ஒருவித அச்சத்துடனே வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை அரசு கல்லூரி வளாகத்தில் நுழைந்த இரண்டு சிறுத்தைகள் கழிப்பறை பகுதியில் அட்டகாசம் செய்துள்ளது. அந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள், சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் பொது மக்களையும் தாக்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது. அதே சமயம், வால்பாறை டவுன் பகுதிகளில் ஆடு, கோழி உள்ளிட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகள் மட்டுமின்றி காட்டுப் பன்றிகளும் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

அதனால், இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் வன விலங்குகள், வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை பிடிப்பதற்காக அதிகளவில் உலா வருகிறது. இதனால் பதற்றமடையும் கிராம மக்கள் ஊருக்குள் நுழையும் வன விலங்குகளை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒன்றுசேர்ந்து வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT