ADVERTISEMENT

எல்.இ.டி. பல்பு வாங்கியதில் முறைகேடு! அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்!  

04:49 PM Jun 15, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி.பல்பு வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 10ஆம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2019-20ல் பேரூராட்சியில் நடந்த ஒரு கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய் ஊழல் சம்பந்தமாக உதவி இயக்குநர் விஜயலட்சுமி, ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, தென்கரை பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், க.புதுபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆண்டவர், உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ். பாலசுப்ரமணி, கோம்பை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி, மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், பூதிப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், ஓடைப்பட்டி பேரூராட்சி செயலாளர் பசீர் அகமது, ஒப்பந்ததாரர்கள் ஜமுனா, ரவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT