ADVERTISEMENT

ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கும் திட்டம் தொடக்கம்!

12:23 PM Dec 24, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24/12/2021) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகிய பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூபாய் 1,000 ஊக்கத்தொகையை ரூபாய் 3,000 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை, 18 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கித் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT