ADVERTISEMENT

தனிமாவட்ட விவகாரத்தால் பற்றி எரியும் மயிலாடுதுறை, கும்பகோணம்!

01:36 PM Jul 22, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கும்பகோணத்திலும், மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என மயிலாடுதுறையிலும், போராட்டங்கள் நடந்துவருகிறது.

ADVERTISEMENT

கடந்த 18 ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் நெல்லையை பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டையும் புதிய மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி. அதனை தொடர்ந்து பேசிய வருவாய்துறை அமைச்சர் உதயக்குமாரோ, கும்பகோணம் மக்களின் வேண்டுகோளுக்கினங்க விரைவில் கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்கப்படும் என கூறினார். இது குடந்தை மக்களே மக்களை மகிழ்வித்தாலும், மயிலாடுதுறை மக்களை போராட்டத்திற்கு தள்ளியது.

இந்தநிலையில் கும்பகோணத்தை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு பாமகவின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசியவர்கள், " மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மாவட்டத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தும், இனியும் காலதாமதம் படுத்துவதில் நியாயமில்லை. உடனே புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் புதிய மாவட்டங்களாக செங்கல்பட்டு, தென்காசி அறிவிக்கப்பட்டதை போல கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உடனடியாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்." என வலியுறுத்தியே பேசினர்.

இது ஒருபுறம் இருக்க நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மூன்று நிட்களாக கடைகளை அடைத்து போராட்டம் நடத்திவருகின்றனர். வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வருவாய் கோட்ட அலுவலரிடம் மனு கொடுத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று நாட்களாக நடந்த கடையடைப்பு போராட்டத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகமும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தனி மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட வில்லை என்றால் தொடர்ந்து கடையடைப்பு போராட்டத்தை நடத்துவோம், என கூறி மனித சங்கிலி போராட்டத்தையும் நடத்தியிருக்கின்றனர்.

கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய இரண்டு கோட்டங்களிலும் தனி மாவட்ட விவகாரம் தீயாக பற்றிவருகிறது, தென்காசியையும், செங்கல்பட்டையும் அறிவித்தவர்கள், குடந்தையை மாவட்டமாக்க உள்ளோம் என்கிற செய்தியை தவிர்த்திருக்கலாம்,இது மக்களுக்கும், அரசுக்கும் நன்மையாக இருந்திருக்கும்."என்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT