ADVERTISEMENT

வேறு ஆணுடன் 'தொடர்பு!'; சித்தியை கொலைச்செய்த வாலிபர்!

09:19 AM Jul 05, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி அருகே, கணவரை இழந்த சித்தி உறவுமுறை கொண்ட பெண் வேறு ஆணுடன் நெருங்கிப் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை மது பாட்டிலால் அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் மணிமாடி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி மலர் (38). தட்டுவடை தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவருக்கு 15 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு இரவு, கடையை பூட்டிவிட்டு மலர் வீட்டுக்குக் கிளம்பினார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வந்து சேராததால், பதற்றம் அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில், போத்தாபுரம் அருகே உள்ள கால்வாயில் மலர் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மலர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கிடந்தது. விசாரணையில் மலருக்கும், அவருடைய உறவினரான காந்தி (28) என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது.

சந்தேகத்தின்பேரில் காந்தியைப் பிடித்து விசாரித்ததில், அவர்தான் மலரை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். காந்தி அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது: ''கொலையுண்ட மலர், காந்திக்கு சித்தி உறவுமுறை ஆகிறது. மலரின் கணவர் இறந்த பிறகு, காந்திதான் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் உறவுமுறை மீறிய நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மலர், வேறு ஒரு நபருடன் நெருங்கிப்பழக ஆரம்பித்திருக்கிறார். இதனால் விரக்தி அடைந்த காந்தி, தன்னைத் தவிர வேறு யாருடனும் பழகக் கூடாது என்று மலரை கண்டித்தார். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளாமல் அந்த நபருடன் தொடர்பில் இருந்தார். சம்பவத்தன்று இரவு மலரை வரவழைத்த காந்தி, குடிபோதையில் அவருடைய தலையில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்தார். சடலத்தை தூக்கிச்சென்று கால்வாயில் போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதன்பின் அவருடைய செல்போன் சிக்னலை வைத்து அவரை கைது செய்தோம்,'' என காவல்துறையினர் கூறினர். இதையடுத்து காந்தியை, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT