ADVERTISEMENT

கொடைக்கானல் மேல்மலையில் பத்து கிலோ கஞ்சாவுடன் பெண் கைது!

04:12 PM Feb 10, 2020 | rajavel

ADVERTISEMENT

கோடை இளவரசியான கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கவுஞ்சியில் பத்து கிலோ கஞ்சாவுடன் பெண் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

கொடைக்கானல் மேல்மலை கிராமப்பகுதியான குண்டுபட்டியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த போதை விருந்தில் போதைக்காளான், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் 250க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து அதன்பின் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.




அதைத் தொடர்ந்து மேல்மலைப் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் தான் நேற்று மேல்மலை கிராமமான கவுஞ்சியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கொடைக்கானல் டிஎஸ்பி ஆத்மநாதன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பத்து கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த துரைசாமியின் மனைவி பஞ்சுவை போலீசார் மடக்கி பிடித்தனர்.

மேலும் அவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா எங்கிருந்து வாங்கி வந்தார். இதன் பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.


ஆக போதை கேளிக்கை விருந்து மூலம் தமிழகம் மட்டும் அல்ல கேரளா, கர்நாடகா உள்பட மாநிலங்களிலிருந்து இளைஞர்களும், ஐ.டியிலும் வேலை பார்ப்பவர்களும் அவர்களுடன் ஆறு பெண்களும் இந்த போதை விருந்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் கஞ்சாவையும், போதை காளானையும் அதிகமாக பயன்படுத்தி போதையில் மிதந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு போதைக் காளானும், கஞ்சாவும் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் தாராளமாக கிடைத்து வருவதன் மூலம் அந்த போதைக்கு அடிமையாக வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் மேல்மலைப் பகுதிக்கு வருகிறார்கள்.

இளைய சமுதாயமும் சீரழிந்து வருவதால் இப்படிப்பட்ட போதைப்பொருட்களை ஒழிக்க போலீசார் இனிமேலாவது தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல்மலைப் பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT