ADVERTISEMENT

“ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வைத்துகொள்ளுங்கள்”-மாவட்ட ஆட்சியர்!

04:17 PM Nov 08, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் 90 சதவீதத்துக்கும் மேல் நிரம்பி உள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளில் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை வெள்ளம் நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்கக் கூடாது.

வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். நீர் வீழ்ச்சிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம்.

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி ஒரு வார காலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உணவு வகைகள், கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய், மருந்து மற்றும் பால் பவுடர் மின் விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள், சுகாதாரத்தை பேணி காக்க தேவையான பொருட்கள் முகக் கவசங்கள் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT