ADVERTISEMENT

'டிக்கெட் பிரதியை வைத்திருக்க வேண்டும்...'-சென்னை காவல்துறை எச்சரிக்கை!

09:39 PM Jan 21, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை முடக்கம் உள்ளிட்டவை அமலில் இருக்கின்றன. இந்நிலையில், இந்த வாரம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 23 அன்று ஊரடங்கு நாளில் பால், மருந்து விநியோகங்களுக்கு மட்டும் அனுமதி. வெளியூரிலிருந்து வரும் பயணிகள் நலன் கருதி சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு வழக்கமாக அந்தப் பகுதிகளில் இயங்கும் ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்கலாம். ஆனால் செயலி மூலமே புக் செய்து பயணத்தை மேற்கொள்ளலாம். உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை காவல்துறை சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பயணிகளை இறக்கி விட்டு திரும்பும் வாகனங்கள் டிக்கெட் பிரதியை வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது சென்னை காவல்துறை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT