Advertisment

தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு முடக்கம் அமலில் இருக்கும் நிலையில், சென்னையில் முழு முடக்கம் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் வெளியில் சுற்றுவோரைபிடித்து அபராதம் விதித்தபோலீசார் எச்சரித்து அனுப்பினர்.