ADVERTISEMENT

வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி சொல்ல தொடங்கிய கதிர்ஆனந்த்... உருவான சர்ச்சை!

04:52 PM Sep 03, 2019 | kalaimohan

தனியாக நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், 8100 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இடைத்தேர்தலைப்போல் நடைபெற்ற இந்த தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை மக்கள் வெற்றி பெற மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக வேலூர் தொகுதி பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதே வாணியம்பாடி நகரிலேயே நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தச்சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின் அதில் தானே வந்து கலந்துக்கொண்டு நன்றி சொல்வதாக கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதன்படி ஆகஸ்ட் 18ந் தேதி நன்றி அறிவிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதிகமாக மழை பெய்ததால் ஆகஸ்ட் 25ந்தேதியென நன்றி அறிவிப்பு கூட்டம் மாற்றி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 25ந்தேதிக்கு முன்பும் அதிகமாக மழை பெய்ததால் ஏற்பாடுகள் செய்ய முடியாமல் கட்சி நிர்வாகிகள் தடுமாறினர். இதனால் அந்த தேதியில் நடைபெறவிருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தன்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக முதல் கட்டமாக சமுதாய அமைப்புகளை சந்தித்து நன்றி கூறி வருகிறார் வேலூர் தொகுதி எம்.பியான திமுகவை சேர்ந்த கதிர்ஆனந்த். அதன்படி செப்டம்பர் 3ந்தேதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் நிசார் அஹமது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்த தேநீர் விருந்தில் கலந்துக்கொண்டு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்கள், ஜமாத் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலருக்கும் நன்றியை கூறினார்.

இதுப்பற்றி பேசும் வேறு சிலர், முக்கிய பிரமுகர்கள் மட்டும் தான் வாக்களித்தார்களா?, நாங்கள் எல்லாம் வாக்களிக்கவில்லையா என சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது நன்றி சொல்ல வேலூர் தொகுதிக்கு வருகிறார் என கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, வரும் செப்டம்பர் 15ந்தேதி, திருவண்ணாமலை நகரில் கட்சியின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. அந்த விழா முடிவுற்றபின்பே ஸ்டாலின் இங்கு நன்றி சொல்ல வரும் தேதி என்ன என்பதை முடிவு செய்வார் என்கிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT