வேலூர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டகதிர் ஆனந்த்வெற்றிபெற்ற நிலையில் அண்ணாஅறிவாலயத்தில்திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,

Advertisment

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றிபெற்ற நிலையில் சிலரின் சூழ்ச்சி காரணமாக வேலூர் தேர்தல் நிறுத்திவைக்கபட்டது.

Advertisment

dmk stalin interview

இந்நிலையில் வேலூரில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி என்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இது ஒரு முழுமையான வெற்றி என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மத்தியில் இருக்கும் ஆட்சியும், மாநிலத்தில் இருக்கும் ஆட்சியும் கூட்டணி சேர்ந்து காட்டியஅதிகார பலத்தை, பணபலத்தை இன்று திமுக எதிர்கொண்டு இந்த வெற்றியை பெற்றுள்ளது. வெற்றி பெற்ற கதிர் ஆனந்துக்கு வாழ்த்துக்கள். வெற்றிக்கு உழைத்ததிமுக நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள்மேலும் குறிப்பாக வாக்களித்த மக்களுக்கும் நன்றி என்றார்.

திமுக முட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக முதல்வர் முன்பு கூறியிருந்தாரே என்ற கேள்விக்கு,

Advertisment

அப்போது முட்டாய் கொடுத்து ஏமாற்றினோம் என்று கூறினார்கள் இப்போது கேட்டால் கமர்கட்டு கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறுவார்கள் என்றார்.