ADVERTISEMENT

செந்தில்பாலாஜி மீது வழக்கு போட என்ன காரணம்?

07:29 PM Mar 26, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கரூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்ய 11 மணி முதல் 12 மணி வரையும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு 12 மணி முதல் 1 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

கரூர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் டவுன் டிஎஸ்பி கும்பராஜா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அலுவலகத்திற்குள் நுழையும் போது அதிமுக வேட்பாளர் இருப்பதால் சிறிது நேரம் காத்திருக்குமாறு டிஎஸ்பி கூறினார். அவர்களுக்கு நேரம் முடிந்து விட்டது என்று திமுக கூட்டணியினர் கூறினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது டிஎஸ்பி கும்பராஜா திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியை தள்ளி விட்டார்.


பின்னர் மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்து உள்ளே அனுப்பினர். உள்ளே மீண்டும் காத்திருக்க வைக்கப்பட்ட போது மீண்டும் குளித்தலை டிஎஸ்பி சுகுமார் செந்தில்பாலாஜியை தள்ளி விட்டார். ஆனால் இதற்கு இடையில் செந்தில்பாலாஜி மீது 3 பிரிவுகளில் அரசு பணி செய்ய விடாமல் தடுத்தார் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த போது செந்தில்பாலாஜி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, தம்பித்துரையின் கடைசி தேர்தல் இது. இந்த தேர்தலில் டெபாசிட் இழந்து கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்க சென்று விடுவார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 2 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். அனுமதி பெற்ற எங்கள் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை டி.எஸ்.பி.கும்பராஜா. அவர் அண்ணா திமுகவின் துணை செயலாளர். அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்போம் என்று பேட்டி அளித்தார்.

இதனால் முன் கூட்டியே கரூர் போலிஸ் செந்தில்பாலாஜியின் மீது வழக்கு போட்டுள்ளது என்கிறார்கள். அதன் பிறகு திமுகவின் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூவை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் டிஎஸ்பி கும்பராஜா செந்தில்பாலாஜியின் கழுத்தில் கையை வைத்து தள்ளி விட்டிருக்கிறார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT