ADVERTISEMENT

தேர்தலை நிறுத்துவேன்-கரூர் கலெக்டர்:முடிந்தால் நிறுத்தி பாருங்கள் - வேட்பாளர் ஜோதிமணி போனில் பேசிய ஆடியோ லீக்

09:28 AM Apr 17, 2019 | Anonymous (not verified)

கரூர் எம்.பி.தொகுதியில் 2 முறை தொடர்ச்சியாக வெற்றிப்பெற்ற அதிமுக தம்பித்துரை 3வது முறையாக வெற்றிபெறுபவதற்கு பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார். அதே நேரத்தில் திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி துணையோடு காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூரில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் தம்பித்துரை வெற்றியை கேள்விக்குறியாக்கி இருக்கிறார். இந்த பதட்டமான சூழ்நிலையில் தான் கடைசி நாள் பிரச்சார அனுமதி கேட்டு ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏற்பட்ட குளறுபடியில் திமுகவினர் டென்ஷன் ஆகி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி அனுமதி வாங்கினர். அதே நேரத்தில் அதிமுக நேரத்தை மாற்றி கொடுத்தனர்.

ADVERTISEMENT



ஆனாலும் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் அதை ஏற்றுக்கொள்ளாமல் திட்டமிட்டபடி நடத்துவோம் என்று அறிவிப்பு திமுகவினர் இடையே திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்று திமுக சார்பில் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் கரூர் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்ததை கரூர் மாவட்ட ஆட்சியர் டெல்லி தேர்தல் தலைமைக்கு 100 பேர் வந்து என்னை கொலைமிரட்டல் விடுகிறார்கள், என் உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT



இதை வேட்பாளர் ஜோதிமணியிடம் போனில் கலெக்டர் பேசியிருக்கிறார். அதில் நான் நேர்மையான கலெக்டர் இரண்டு பக்கமும் நடுநிலையோடு நின்று தான் பணி செய்கிறேன். ஆனாலும் என்னை மிரட்டுகிறார்கள், நீங்கள் என்னை புகார் செய்து இங்கிருந்து மாற்றிவிடுங்கள், என் மீது குறையிருந்தால் சொல்லுங்கள் நான் ராஜினாமா செய்து விடுகிறேன். எப்படி இரவு நேரத்தில் என்னை பார்க்க வரலாம், நான் முன்னாள் ராணுவ வீரரின் மகன் எனக்கு பயமாக இருக்கிறது. கரூர் தேர்தலை நிறுத்த சொல்லி தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கிறேன். என்று சொல்கிறார். எல்லா வீடியோகளை நான் சமர்பிக்க போகிறேன். தேர்தலை நிறுத்த சொல்லி அனுப்பியிருக்கிறேன் என்கிறார். உங்களை நான் தேசிய தலைவராக பார்க்கிறேன். என்னால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. எனக்கு உயிர் பயம் வந்துவிட்டது. எனக்கு பாதுகாப்பு இல்லை சொல்லியிருக்கிறார்.



அதே நேரத்தில் கலெக்டரின் இந்த பதிலை எதிர்கொண்ட வேட்பாளர் ஜோதிமணி நீங்கள் எங்களுக்கு தலைமை அதிகாரி உங்களை பார்க்க வருவதற்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது 24 மணிநேரமும் உங்களை சந்திக்கலாம் காரணம் இது தேர்தல் காலம், 13 இலட்சம் மக்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை தேர்தல் அதிகாரி கொடுத்த உத்தரவை அமைச்சர் மீறி பேசுகிறார் அது குறித்து புகார் கொடுத்த தான் உங்களிடம் வந்தாங்க, அதை நீங்கள் கொலை மிரட்டல் செய்ய வந்தாங்க என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். ஆரம்ப முதலே தேர்தல் அதிகாரியான நீங்கள் அதிமுகவின் ஆளாக தான் நின்று செயல்படுகிறீர்கள். வழக்கு என்மீது போட்டாலும் அதை சந்திக்க தயாராக தான் இருக்கிறோம்.

தம்பித்துரை தோற்றுபோய்விடுவோம் என்கிற பயத்தில் தேர்தலை நிறுத்துவதற்கு நினைக்கிறார். அவர்களுக்கு நீங்கள் வேலை செய்கிறீர்கள், நாங்கள் தேர்தல் தலைமை ஆணையத்தை நம்புகிறோம். அங்கே உங்களை பத்தி புகார் செய்வோம். நீங்கள் ஒருதலைபச்சமாக ஆரம்ப முதல் நடந்து கொள்கிறீர்கள் என்பதை எடுத்து வைப்போம் என்றார். அனைத்தையும் சட்டரீதியாக செய்து காட்டுவோம். எங்களுக்கு நீங்கள் ஒவ்வொரு முறையும் எப்படி எங்களை நெருக்கடி கொடுக்கீறீர்கள் என்பதை நாங்கள் நிரூப்போம். தேர்தல் அதிகாரி தேர்தலை நிறுத்துகிறோம் என்று சொல்லமா என்று கலெக்டரிடம் தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்திருக்கிறார்.



ஆக கரூர் தேர்தலை நிறுத்துவதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு செய்து விட்டார். ஆனாலும் நிறுத்த விடமாட்டோம் என்று திமுக தரப்பில் கடுமையான சட்டப்போராட்டம் நடத்துகிறார்கள். ஒரு தேர்தல் நடந்தாலும் அதற்கு என்ன வேண்டுமானலும் நடக்கும் என்பது தான் தற்போதையை நிலை !.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT