BJP leader lodges complaint with Karur MP Jyotimani

கடந்த 18 ந் தேதி தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட கரூர் தொகுதி காஙகிரஸ் எம்.பி ஜோதிமணி பிரதமர் மோடியை பற்றி பேசியிருந்தார். தொடர்ந்து பேசிய பாஜக பிரமுகர் கருநாகராஜன் தனிப்பட முறையில் ஜோதிமணியை தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில், ஜோதிமணி எம்.பி விவாதத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

Advertisment

Advertisment

இந்த நிகழ்ச்சியால் பாஜக பிரமுகர் கரு நாகராஜனுக்கு எதிராக கண்டன குரல்கள் எழந்துள்ளது. இந்த நிலையில பிரதமர் மோடியை ஜோதிமணி எம்பி தரக்குறைவாக பேசியுள்ளா், அதனால் அவரைகைது செய்ய வேண்டும் என்று அன்னவாசல் பாஜக தெற்கு ஒன்றிய தலைவர் ரெங்கையா கட்சிப் பிரமுகர்களுடன் இலுப்பூர் காவல்நிலையம் சென்று இன்று புகார் அளித்துள்ளார்.

BJP leader lodges complaint with Karur MP Jyotimani

புகாரை பெற்ற போலீசார் அவருக்கு மனு ரசீது அளித்துள்ளனர்.இதேபோல காங்கிரஸ் கட்சியினர் கரு நாகராஜன் மீது தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் புகார் கொடுக்க தயாராகி வருகின்றனர்.