ADVERTISEMENT

கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு 2 லட்சம் நிதியுதவி

11:01 AM Mar 16, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, திமுக தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக்கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தகக்கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ. 4 கோடியே 75 லட்சத்து 90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2019, பிப்ரவரி மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000/- (இரண்டு லட்சம்) 16-3-2019 அன்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிதி பெறுவோர் வெளிமாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.


நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை ரூ. 4 கோடியே 75 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2012 சூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ரூ.2,00,000/-கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நிதி உதவி பெறுவோர் விவரம்:

1 . சி.காசி, தோமையப்பன் தெரு, இராயப்பேட்டை, சென்னை மேற்கு மாவட்டம் - 25,000/-

2 . பச்சையம்மாள், நடுத் தெரு மேற்கு, பொதட்டூர்பேட்டை,
பள்ளிப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் - 25,000/-

3 . க.வாசுதேவன், மேலத் தெரு, சோமேஷ்வரபுரம், பாபநாசம், தஞ்சை மாவட்டம் - 25,000/-

4 . நா.வீரமுத்து, தெற்கு தெரு, வடக்கு பொய்கைநல்லூர், நாகை மாவட்டம் - 25,000/-

5 . எம்.முனுசாமி, வேப்பாலம்பட்டி கிராமம், சந்தூர் அஞ்சல்,
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் - 25,000/-

6 . கே.பிரதீப், கன்னிமாரியம்மன்கோவில் தெரு, குன்னூர், நீலகிரி மாவட்டம் - 25,000/-
7 . எஸ்.மணிகண்டன், பொன்னையாபுரம், 28வது வார்டு,
பரமக்குடி அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம் - 25,000/-

8 . சு.முருகேசன், கங்காகுளம் ரோடு, செங்கமலநாச்சியார்புரம்,
திருத்தங்கல் வழி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம் - 25,000/-
மொத்தம் ரூ. 2,00,000/-

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT