ADVERTISEMENT

கார்த்திகை திருவிழாவுக்கு 'துணிப்பை, சணல் பை' கொண்டு வந்தால் தங்கம், வெள்ளி பரிசு!

06:30 PM Dec 06, 2019 | santhoshb@nakk…

கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் துணிப்பை, சணல் பை கொண்டு வந்தால் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 1- ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் காலை மற்றும் இரவில் வலம் வரும் உற்சவ மூர்த்திகளை தரிசித்து வருகின்றனர்.

திருவிழாவில் முக்கிய நிகழ்வான டிசம்பர் 7- ஆம் தேதி பெரியத்தேர் என்கிற மகாரதம் வீதியுலாவும், டிசம்பர் 10- ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிகழ்வை காண தமிழகம் உட்பட பல பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

அதை தொடர்ந்து, திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப்பை, சணல் பை கொண்டு வந்தால் குலுக்கல் முறையில் தேர்நதெடுக்கப்படும் 12 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயமும், 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்படும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை பக்தர்கள் பெருமளவில் தவிர்ப்பார்கள் என்று மாசுக்கட்டுப்பாட்டு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT