ADVERTISEMENT

சிபிஐ நீதிமன்றத்தில் இருந்த கார்த்தி சிதம்பரம் வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

05:52 PM May 30, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது இது வழங்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ADVERTISEMENT

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி விட்டதால், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் நடைபெறவிருக்கிறது. இதற்காக வழக்கை இன்று சிறப்பு நீதிமன்றத்திற்கு சிபிஐ மாற்றி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT