ADVERTISEMENT

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்

10:22 AM Sep 22, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் குடிநீர் பிரச்சனை, நீர்ப்பற்றாக்குறை இருப்பதால் உத்தரவைப் பின்பற்ற இயலாது; 2 ஆயிரம் கன அடிநீர் மட்டுமே திறந்து விட முடியும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது.

இதனிடையே காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரை முருகன், “விநாடிக்கு 5,000 கன அடிநீரை 15 நாட்களுக்கு திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்திற்கான பங்கைத் தர கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும். தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு கர்நாடக அரசு ஆளாக நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT