ADVERTISEMENT

முகநூல் பழக்கம்; இளைஞரிடம் சிக்கிய மூதாட்டி எடுத்த விபரீத முடிவு

11:34 AM May 18, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள பட்டரிவிளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் அருள் (வயது 30). பொறியாளராக உள்ள இவருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கொட்டிப்பாடிபுத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் சமூக வலைத்தளமான முகநூலில் அறிமுகமாகி உள்ளார். அவரோடு மிகவும் நட்பாகப் பழகிய அருள் மூதாட்டியிடம் இருந்து அவரது புகைப்படங்களை முகநூல் மூலம் பெற்றுள்ளார்.

மூதாட்டியிடம் இருந்து புகைப்படங்களைப் பெற்ற அருளின் நடவடிக்கை மற்றும் பேச்சில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், மூதாட்டியின் புகைப்படங்களை மார்பிங் செய்து அவரது கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டத் தொடங்கி உள்ளார். இந்த படங்களை மூதாட்டியின் கணவருக்கு அனுப்பாமல் இருக்க தனக்குப் பணம் தர வேண்டும் என கூறி மூதாட்டியை மிரட்டி உள்ளார்.

முதலில் பயந்து போன மூதாட்டி அருள் கேட்ட 12 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அருள் மூதாட்டியிடம் மீண்டும் மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். அருளின் செயலால் மிகவும் மனவேதனை அடைந்த அந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து பெங்களூரு புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் இந்த சம்பவத்திற்கு காரணமான அருள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், கன்னியாகுமரி வந்த பெங்களூரு போலீசார் மார்பிங் செய்து மிரட்டி மூதாட்டியிடம் இருந்து பணம் பறிக்க முயன்றதுடன் மூதாட்டியை தற்கொலைக்குத் தூண்டிய அருளை இரணியல் காவல்துறையினர் உதவியுடன் கைது செய்தனர். அதன் பின் அவரை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT