ADVERTISEMENT

நாளை அனந்தசரஸ் குளத்தில் இறங்குகிறார் அத்திவரதர்... இன்றுடன் முடிகிறது தரிசனம்!

10:47 AM Aug 16, 2019 | kalaimohan

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவம் 46 நாட்களை கடந்து இன்று 47 வது நாளாக நடைபெற்று வருகிறது. முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அத்திவரதரை இதுவரை சுமார் 1 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில் நேற்றே சுதந்திர நாள் என்பதால் விடுமுறை காரணமாக சுமார் 6 லட்சம் பக்தர்கள் காஞ்சியில் குவிந்தனர்.

இந்த வைபவம் இன்றுடன் முடியுவடையும் நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று நள்ளிரவு 12 அல்லது அதிகாலை 4 மணிவரை மட்டுமே பொது தரிசனமும் அனுமதிக்கப்படும். வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அதாவது நாளை வரதராஜபெருமாள் கோவில் ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வெள்ளிப்பெட்டியில் வைக்கப்பட இருக்கிறார். இதன் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து 2059ல் தான் அத்திவரதரை தரிசிக்க முடியும்.

இன்று காலை முதல் தற்போதை நிலவரப்படி ஒரு லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். இரண்டு லட்சம் பேர் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT