காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழா என்பதால் அத்தி வரதரை தரிசிக்க தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். பக்தர்களை ஒழுங்குபடுத்திட, பாதுகாப்பு பணி மற்றும் மருத்துவ குழுவினர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். தரிசன முறையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது பக்தர்கள் நெரிசல் இன்றி சென்று வருகின்றனர். இதுவரை சுமார் 34 லட்சத்துக்கும் மேலானோர் அத்திவரதரை தரிசித்து உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு சுமார் 3 மணி முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது. அவர்கள் கோவிலைச் சுற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கின்றனர்.

Advertisment

minister rajendrabalaji interview in kanjipuram

பகல் நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களின் சோர்வை நீக்கும் வகையில் பக்தர்களுக்கு ஆவின் நிறுவனம் சார்பில் விலையில்லா மோர், நறுமண பால் வழங்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேற்கு கோபுரம் அருகே உள்ள பதினாறுகால் மண்டபம் பகுதியில் பக்தர்களுக்கு விலையில்லா ஆவின் மோர், நறுமண பால் வழங்கும் பணியை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

Advertisment

அத்திவரதர் தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கே.டி.ராஜேந்திரபாலாஜி

“40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி பூத்தாற்போல் அத்திவரதர் பூமிக்கு மேல் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். நீதிக்கட்சி ஆட்சியின் போதும் எம்ஜிஆர் ஆட்சியின் போதும் தற்போது எடப்பாடியார் ஆட்சியிலும் அத்திவரதர் பூமிக்கு மேல் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தாண்டியும் அத்திமரத்திலான அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மகிமையைப் பார்க்கும் போது உலகறிய ஆன்மீகத்தின் பயணம் அறிய முடிகின்றது. காஞ்சிபுரத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக முதல்வர் எடப்பாடியார் சிறப்பாக செய்து வருகின்றார்.

Advertisment

minister rajendrabalaji interview in kanjipuram

பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்வதற்கு, விஐபி தரிசனம், பொது தரிசனம், மருத்துவம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது.. அனைத்துத்துறை அதிகாரிகளைக் கொண்டு பக்தர்களுக்கான வசதிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன, ஆவின் நிர்வாகம் சார்பாக விலையில்லா மோர், நறுமண பால் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆவின் மோர் பந்தலை நான் தொடங்கி வைத்துள்ளேன். தமிழகத்தில் ஒரு ஆன்மீக ஆட்சி நடைபெறுகின்ற காரணத்தினால், இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு அத்திவரதர் அருளாசி இருக்கும். .அத்திவரதர் ஆசி தமிழக மக்களுக்கும் கிடைக்கும்.. அத்திவரதர் ஆசி இருப்பதால் வறட்சி நீங்கி மழை நன்றாகப் பெய்யும்” என்றார்.

பெரியார் வழியொற்றி வந்த அண்ணாவையும் திராவிடத்தையும் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு ‘ஆன்மிக ஆட்சி’ என்று பிரகடனப்படுத்தி இருக்கிறாரே அமைச்சர்! பா.ஜ.க. காற்று அதிமுக ஆட்சியின் பக்கம் பலமாக வீசுகிறது போலும்! துணிந்து சொல்லிவிட்டார் அமைச்சர்!