ADVERTISEMENT

தொல்லியல் மாணவர்களை சந்தித்து பாராட்டி பரிசு வழங்கிய கனிமொழி எம்.பி

11:02 PM Dec 26, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி சுரேஷ் சுதா அழகன் அரசுப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த +2 மாணவி முனீஸ்வரி முதலாம் ராஜராஜன் சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக வெளியிடப்பட்ட ஈழக்காசுகளை கண்டெடுத்த செய்தியை நக்கீரன் இணையத்தில் "இலங்கையை வென்ற ராஜராஜசோழன். ஆதாரத்தைக் கண்டுபிடித்த அரசுப்பள்ளி மாணவி" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்தி வெளியான நிலையில், கனிமொழி எம்.பி. மாணவி முனீஸ்வரியையும் அந்த மாணவிக்கு பயிற்சி அளித்த தொன்மை பாதுகாப்பு மன்றப் பொறுப்பாளர் ஆசிரியர் ராஜகுரு மற்றும் பள்ளி நிர்வாகத்தையும் பாராட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடியிலிருந்த கனிமொழி எம்.பி யை தொன்மை பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகுரு தலைமையில் திருப்புல்லானி அரசுப்பள்ளி முன்னாள் மாணவி தொல்லியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் முதுகலை தமிழ் மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லானி அரசுப் பள்ளி +2 மாணவி தமிழ் பிராமி, வட்டெழுத்துகளைப் படியெடுத்து படிக்கும் வட்டெழுத்து கோகிலா, (இவரது வயதில் வட்டெழுத்து படிக்கும் ஒரே மாணவியாக அறியப்படுகிறது), அதே பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தமிழ் பிராமி, கல்வெட்டு, கட்டிடக்கலை, ஓவியம் பற்றி அறிந்த பிரவீனா, டோனிகா மற்றும் கல்வெட்டு, கட்டிடக்கலை, தமிழ் பராமி, வட்டெழுத்து, ஆகியவற்றுடன் அகழாய்வு பற்றியும் அறிந்து பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணிகளில் பங்கேற்ற 10 ம் வகுப்பு மாணவன் மனோஜ் ஆகியோர் சந்தித்தனர்.

ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டறிந்த கனிமொழி எம்.பி இனி வரும் காலங்களில் கல்வெட்டு கட்டிடக்கலை அறிந்தவர்கள் குறைவாக உள்ளதால் நீங்கள் அனைவரும் தொடர்ந்து பயிற்சி பெற்று ஆய்வுகள் செய்ய வேண்டும். அதற்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறியதோடு மாணவர்களைப் பாராட்டினார். தொடர்ந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துவரும் ஆசிரியர் ராஜகுருவுக்கு பாராட்டுத் தெரிவித்தவர், இன்னும் நிறைய மாணவர்களை உருவாக்க வேண்டும் அதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகக் கூறினார்.

அப்போது அந்த குழுவில் ராஜராஜசோழன் இலங்கையை வென்றதன் அடையாளமாக வெளியிடப்பட்ட ஈழக்காசு கண்டெடுத்த மாணவி முனீஸ்வரி ஏன் வரவில்லை என்று கேட்டவர் அவரை யாராவது மிரட்டி அச்சமூட்டி வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மாணவிக்கும் பயிற்சியும் ஊக்கமும் கொடுத்து இன்னும் நிறையச் சாதிக்க செய்ய வேண்டும் என்றவர் அனைவருக்கும் புத்தகம் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்வால் மாணவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT