Advertisment

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பபெற வழியுறுத்தி திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்திவருகின்றனர். வடசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக பி.கே.சேகர்பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர். திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், ஜெ.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment