ADVERTISEMENT

8 வழிச்சாலை பற்றி பேசக்கூடாது என எச்.ராஜா எப்படி சொல்லலாம்? கமல்ஹாசன் ஆவேசம்!

05:29 PM Jul 26, 2018 | Anonymous (not verified)


8 வழிச்சாலை பற்றி பேசக்கூடாது என எச்.ராஜா எப்படி சொல்லலாம்? என மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஓ.பி.எஸ் மீது ஊழல் புகார் எழுப்பப்பட்ட நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். காவிரியில் நீா் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே கா்நாடகா முதல்வரை நேரில் சந்தித்தேன். ஆனால் அந்த சந்திப்பு திரித்து கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் கண்டிப்பாக தேவைதான். தற்போது போதிய மழை பெய்து வருவதால் ஆணையத்தின் நடவடிக்கை தேவைப்படாமல் உள்ளது. லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது வெறும் கண்துடைப்பு.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நான் 6 மாதங்களுக்கு முன்பே கருத்து தெரிவித்தேன். நான் 6 மாதங்களுக்கு முன்னா் கூறிய கருத்தை தமிழக மக்கள் தற்போது வழிமொழிவது வரவேற்கத்தக்கது. ஓ.பி.எஸ் சகோதரருக்கு, நிர்மலா சீதாராமன் ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்து உதவியதை நான் அரசியல் மாண்பு சீரழிந்து வருவதாக கருதுகிறேன். எம்.ஜி.ஆர் அவர்கள் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நிலையில் கூட தனியார் விமானத்தில் தான் கொண்டு செல்லப்பட்டார்.

8 வழிச்சாலையை பற்றி எந்த ஏழையும் பேசலாம். எங்களுக்கு வேண்டுமா, வேண்டாமா? என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். 8 வழிச்சாலை பற்றி பேசக்கூடாது என எப்படி சொல்லலாம்? அது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT