எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எனது டெல்லி பயணம் அரசியல் பயணம் அல்ல. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளேன். சகோதரர் சிகிச்சைக்காக விமானம் அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்க வந்தேன் என செய்தியாளர்களிடம் கூறி டெல்லி சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.

Advertisment

ஆனால், டெல்லி சென்ற துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிர்மலா சீதாராமனை சந்திப்பிற்கான அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதிமுக எம்.பி.மைத்ரேயனுக்கு சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இதனை நிர்மலா சீதாராமன் அலுவலகம் டிவட்டரில் பதிவிட்டது.

nirmala twit

Advertisment

இதையடுத்து, நிர்மலா சீதாராமனை சந்திக்க முடியாத ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் இருந்து மீண்டும் சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்த அவர்,

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா கூறியுள்ளார் என செய்தியாளர்களிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.