ADVERTISEMENT

'கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் பெயர்'-தமிழக முதல்வர் அறிவிப்பு!

08:16 PM May 01, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கிண்டியில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறையின் பவள விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர், ''மக்கள் பயன்பாட்டில் மிகவும் முக்கியமானத்துறை தமிழக நெடுஞ்சாலைத்துறை. 1946ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு இன்றோடு 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் இந்த நெடுஞ்சாலைத்துறைதான். 1954 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி இந்தியாவிலேயே மாநில அளவிலான முதல் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் என்ற பெருமையைப் பெற்றது. இதுதான் இந்தியாவிற்கே முன் மாதிரியான ஆராய்ச்சி நிலையம். நெடுஞ்சாலைத்துறைக்கென தனி அமைச்சகம் 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனை உருவாக்கியது நம்மை ஆளாக்கிய கலைஞர். நாட்டில் சிறந்த மேம்பாலங்களில் ஒன்று சென்னை அண்ணா மேம்பாலம். தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் ஏராளமான பாலங்கள் கட்டப்பட்டன. அரசுக்கு நல்ல பெயரும் அவப்பெயரும் நெடுஞ்சாலைத்துறை மூலமே கிடைக்கும். அந்த அளவிற்கு முக்கியமான துறை இது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து சென்னை-மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு 'கலைஞர் கருணாநிதி' பெயர் சூட்டப்படும் என்ற ஒரு அறிவிப்பையும் தமிழக முதல்வர் நெடுஞ்சாலைத்துறை பவள விழாவில் அறிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT